2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சீனத் தூதுவரை சந்தித்தது TNA

Simrith   / 2024 ஓகஸ்ட் 13 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong உடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் திங்கட்கிழமை சீனத் தூதுவருடன் மிகவும் சுமுகமான மற்றும் பயனுள்ள கலந்துரையாடல்களை நடத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

சமகால விவகாரங்கள் மற்றும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் குறித்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X