2025 மே 01, வியாழக்கிழமை

‘சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வேண்டும்‘

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 29 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்   

சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்குமாறு கிளிநொச்சி மாவட்டம், பூநகரி இரணைதீவில் குடியேறியுள்ள  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இரணைதீவில் மக்கள் குடியேறிய உடன் புநகரி பிரதேச செயலகத்தினால் குடிநீர்த் திட்டம் ஒன்று தொடங்கப்பட்ட போதும் அத்திட்டமானது தற்போது செயலிழந்து காணப்படுகின்றது. 

இதன் காரணமாக சுத்தமான குடிநீரினைப் பெற்றுக் கொள்வதில் நெருக்கடி நிலைமை காணப்படுவதாகவும், நீண்ட தூரம் சென்றே குடிநீரினைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

எனவே  பூநகரி பிரதேச செயலகம், மற்றும் மாவட்டச் செயலகம் இப்பிரச்சனைக்கான தீர்வினைப் பெற்றுத்தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 
 
 
 
 
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .