Mayu / 2024 ஜூலை 17 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
யது பாஸ்கரன்
கிளிநொச்சி பூநகரி பரந்தன் வீதியில் பொலிஸாரின் சைகையை மீறி சென்ற டிப்பர் வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (16) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்திற்க்குட்பட்ட குடமுருட்டி பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்ந்து சென்ற டிப்பர் வாகனத்தை பொலிஸார் சோதனையிட முற்பட்டவேளை பொலஸாரின் சைகையை மீறி டிப்பர் வாகனம் வேகமாக பயணித்துள்ளது.

குறித்த வாகனத்தை சுமார்13 கிலோமீற்றர் தூரம் துரத்திச் சென்ற பொலிஸார் குறித்த டிப்பர் வாகனத்தின் மீது பூநகரி பகுதியில் வைத்து மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் டிப்பர் வாகனத்தில் பயணித்த கிளிநொச்சியை சேர்ந்த ஆறுமுகம் நிதர்சன் (வயது- 23) என்பவரே இவ்வாறு காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், டிப்பர் வாகனத்தில் பயணித்த ஏனைய இருவர் தப்பி சென்ற நிலையில் ஒருவரை கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
2 hours ago
12 Mar 2026
12 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
12 Mar 2026
12 Mar 2026