2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஜஸ்டின் - செல்வம் இடையில் விசேட சந்திப்பு

Janu   / 2024 ஒக்டோபர் 22 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவிஸ் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான முதல் செயலாளர் ஜஸ்டின் பொய்லட்  ( justine boillat)  தலைமையிலான குழுவினர்  செவ்வாய்க்கிழமை(22) அன்று மன்னாருக்கு விஜயம் செய்த நிலையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனை மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடினர்.

இதன் போது தமிழீழ விடுதலை இயக்கத்தின் மன்னார் மாவட்ட பொறுப்பாளர் டானில் வசந் கலந்து கொண்டிருந்தார்.

இதன் போது கட்சியின் செயல்பாடுகள் மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்,தற்போதைய தேர்தல் நிலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் குறித்த ஜஸ்டின்  தலைமையிலான குழுவினர்  கேட்டறிந்து கொண்டனர்.

இதன் போது மன்னார் மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறித்த குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

எஸ்.ஆர்.லெம்பேட்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X