2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

டிப்பர் வாகனம் மோதி குடும்பஸ்தர் பலி

Freelancer   / 2023 செப்டெம்பர் 21 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார்- நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கட்டைக்காடு காட்டுப்புதுக் குடியிருப்புப் பகுதியில் டிப்பர் வாகனம் மோதி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து  நேற்று புதன்கிழமை (20) மாலை 4 இடம்பெற்றுள்ளது,
விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின்  சாரதி  மற்றும் உதவியாளர் அங்கிருந்து தப்பிச்   சென்ற நிலையில் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



விபத்தில் உயிரிழந்தவர்  நானாட்டான் பிரதேசத்தில் இராசமடு  சாளம்பன் பகுதியில் வசிக்கும் 55 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான  நடராசா ஞானசேகரம் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம்  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து  தொடர்பான மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X