2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

தலைமன்னாரில் மீனவர்கள் மாயம்

Freelancer   / 2023 செப்டெம்பர் 14 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட் 

தலைமன்னாரிலிருந்து மீன்பிடியில் ஈடுபடுவதற்காக  படகு ஒன்றில் சென்ற இரு மீனவர்கள் கரை திரும்பாத நிலையில் தலை மன்னார் மீனவர்கள் குறித்த மீனவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் குறித்த மீனவர்களை   தேடிச் சென்ற படகுகளில் இரு படகுகள் கடல் கொந்தளிப்பு மற்றும் கடும் காற்றின் காரணமாக கச்சத்தீவில் தரித்து நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த செவ்வாய்கிழமை(12)  மாலை 07.30 மணி அளவில் தலைமன்னார் கிராமம் கடற்கரையிலிருந்து வட கடலில் இரு மீனவர்கள் ஒரு படகில் வலிச்சல் மூலம் மீன் பிடிக்க சென்றுள்ள நிலையில் அவர்கள் கரை திரும்பும் நேரத்தில் கரை திரும்பாததால் இப் பகுதி மீனவர்கள் கடலில் இவர்களை தேடுவதில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன இரு மீனவர்களும் தலைமன்னார் ஊர்மனையைச் சேர்ந்தவர்கள் எனவும் இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான ஜே.நிக்சன் டிலக்ஸ் கூஞ்ஞ மற்றும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரி. சுமித்திரன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X