Janu / 2024 ஜூன் 05 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுவயது காதல் ஜோடியொன்று , நீதிமன்றினால் தண்டிக்கப்பட்ட பின்னரும் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறி பிறிதொரு இடத்தில் தங்கியிருந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞனும் , 16 வயது சிறுமியும் காதலித்து வந்த நிலையில் கடந்த 06 மாத கால பகுதிக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறி பிறிதொரு இடத்தில் தங்கியிருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு , நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
நீதிமன்ற விசாரணைகளையடுத்து, இளைஞனுக்கு 3 மாத கால சிறைத்தண்டனை விதித்த மன்று , சிறுமியை சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்குமாறு கட்டளையிட்டது.
இந்நிலையில் இருவரது தண்டனை காலங்களும் நிறைவடைந்து தமது வீடுகளுக்கு திரும்பியவர்கள் , மீண்டும் தமது வீட்டை விட்டு வெளியேறி , யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் தங்கிருந்துள்ளனர்.
இது தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார் இருவரையும் கைது செய்து , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் .
எம்.றொசாந்த்
1 hours ago
4 hours ago
12 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
12 Mar 2026