2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

தீர்வு கிடைக்காவிடின் போராட்டம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 12 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் பள்ளிமுனை கடற்கரையிலிருந்து அட்டை பிடிக்க கடலுக்குச் செல்லும் பள்ளிமுனை கிராம மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று (12) வியாழக்கிழமை பள்ளிமுனை கடற்கரையில் இருந்து கடலட்டை பிடிக்க தொழிலுக்குச் செல்ல முயன்ற போது தொழிலாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களின் பின்னர் தற்போது கடலட்டை பிடிக்கும் சீசன் என்பதால் மீனவர்கள் கடலட்டை பிடிக்கும்  நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் படகு ஒன்றில் சுமார் 10 பேர் வரை கடலட்டை பிடிக்க சென்று வருகின்றனர்.தற்போது படகு ஒன்றில் 8 சிலிண்டர்களுடன் 3 பேர் மாத்திரமே தொழிலுக்குச் செல்ல முடியும் என மன்னார் கடற்றொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

இதனால் மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (12) படகு ஒன்றில் 3 பேர் மாத்திரமே செல்ல முடியும் என கடற்படை அறிவித்தமையினால் மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

உரிய தீர்வு இல்லாது விட்டால் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக பள்ளிமுனை மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.

எஸ்.றொசேரியன் லெம்பேட்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X