2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தேநீர் அருந்திய ஊழியர் திடீர் உயிரிழப்பு

Janu   / 2023 டிசெம்பர் 25 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். ஒட்டுசுட்டான் இலங்கை வங்கிக் கிளையில் நிறைவேற்று உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் உத்தியோகத்தர் ஒருவர் தேநீர் அருந்திய நிலையில், திடீரென உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (24)  பதிவாகியுள்ளது.

தம்பசிட்டி-பருத்தித்துறையைச் சேர்ந்த வங்கி உத்தியோகத்தரான 41 வயதுடைய நபர்,  கொடிகாமம் பகுதியில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதையடுத்து, அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும்போது உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

எஸ்.தில்லைநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X