Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 31 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். போதனா வைத்திய சாலையில் ஆயிரம் பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை நேற்று (30) முதல் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநரின் பங்கு பற்றுதலுடன் யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில் இடம் பெற்றது. M
அசிஸ்ட் .ஆர்.ஆர் பிரித்தானியா அன் இலங்கை நிறுவனத்தின் ஏற்பாட்டில் அலாக்கா மற்றும் ஆனந்தா பவுண்டேஷனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனர்வாழ்வும் புதுவாழ்வும் நிறுவனத்தின் அனுசரனையில் மேற்கொள்ளப்படுகிறது.
உலக பார்வை தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம், இரத்தினபுரி வைத்திய சாலைகளின் நல்லுறவினை மேம்படுத்தும் முகமாக இம்மாதம் 30ம் திகதி தொடக்கம் மூன்றாம் திகதி வரை யாழ் போதனா வைத்தியசாலை கண் சிகிச்சை வைத்திய நிபுணர் மலரவனின் நெறிப்படுத்தலில் கண் சிகிச்சை பிரிவில் ஆயிரம் பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான செயற் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
இந்த கண் புரை சத்திர சிகிச்சையில் யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இருந்து 50க்கும் மேற்பட்டோரும் மற்றும் அனுராதாபுரம் மதவாச்சி, பதவியா பகுதிகளில் இருந்து 170 க்கும் மேற்பட்டோருக்கு (31) திகதி சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது
இதே போன்று எதிர்வரும் நாட்களிலும் குறித்த சத்திர சிகிச்சை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு ஆயிரம் பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிதர்ஷன் வினோத்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
3 hours ago
4 hours ago
8 hours ago