Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 20 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையர்களின் டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துதல், தொடர்பாடல் மற்றும் சிந்தனைத் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் தொழில் வாய்ப்புகளை முழுவதுமாக உள்ளடக்கும் நோக்கத்துடன் திரு.தம்மிக்க பெரேரா “DP கல்வி” திட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இத்திட்டத்தின் 61வது நிலையமானது அநுராதபுரம் நகரிலுள்ள வீரசேகரராம ஸ்ரீ பாரதிந்திர மகா பிரிவேன் வித்யாதனயவை மையமாக கடந்த ஜூன் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
40 நவீன கணனிகள் பொருத்தப்பட்ட இந்த நிலையம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதுடன் பாடநெறிகளை பூர்த்தி செய்த 100 மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
கல்விக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். உலகில் எந்த நாடும் கல்வியறிவின்றி வளர்ச்சியடையவில்லை. படிப்பறிவில்லாதவர்களைக் கொண்டு எந்த நாடும் வளர்ச்சி அடையவில்லை.
இந்த கல்வி என்ற தடுப்பூசியை குழந்தைகளுக்கு போடும் போது நாடு தானாக உயரும். எனக்கும் இந்த நாட்டை உயர்த்த வேண்டும் என்ற எண்ணமே உள்ளது என டி.பி. கல்வி நிறுவனத்தின் தலைவர் திரு.தம்மிக்க பெரேரா இதன் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
27 minute ago
3 hours ago
3 hours ago