2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

நீரில் மூழ்கி இளைஞன் பலி

Janu   / 2026 ஜனவரி 20 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா, மஹாமைலன்குளம் ஏரியில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வவுனியா  கோவில் புதுக் குளத்தைச் சேர்ந்த 19 வயதுடைய சிவலிங்கம் தனுஷியன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.   

தனது நண்பர்கள் ஐவருடன் குறித்த ஏரியில் நீராடச் சென்ற போது குறித்த இளைஞன் ஏரிக்குள் இறங்கிய நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். 

பின்னர் பிரதேசவாசிகள் இணைந்து குறித்த இளைஞனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X