Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2022 பெப்ரவரி 17 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்து நிலையத்திற்கு வழங்கப்பட்ட படகு வெளிஇணைப்பு இயந்திரங்கள் இரண்டு மாவட்டஅரசாங்க அதிபரினால் கடற்படையினருக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
படகு வெளிஇணைப்பு இயந்திரம் ஒவ்வொன்றும் 5 இலட்சம் பெறுமதியானவை
முல்லைத்தீவு மாவட்டத்தில் 71 கிலோமீற்றர் நீளம் கொண்ட கடற்பரை பிரதேசமும் தாள் நில பிரதேசங்களும் காணப்படுகின்றன.
கடல் மற்றும் தரை நீருடன் தொடர்புடைய அனர்த்தங்கள் நிகழும் பொழுது அதில் இருந்து மீட்பதற்கான செயற்பாட்டிற்காக இந்த இரண்டு இயந்திரங்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் கடந்த காலங்களில் அனர்த்தங்கள் ஏற்படும் போது கடற்படையினரின் உதவியுடனேயே மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மழைவெள்ளத்தின் போதும் கடற்படையினரின் உதவியுடன் படகுமூலம் மக்களை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ரீதியாக ஏற்படும் அனர்த்தத்திற்கு முன்னுரிமையளித்து படகு வெளி இணைப்பு இயந்திரங்கள் இரண்டும் கடற்படையினருக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
கடற்படையினருக்கு கையளிக்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது இதன்போது முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் மாவட்ட அனர்த்த முகாமைத்துவு உதவிப்பணிப்பாளர் எஸ்.லிங்கேஸ்வரகுமார் மற்றும் வட்டுவாகல் கடற்படை முகாமின் அதிகாரி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
24 May 2025
24 May 2025