2025 ஜூலை 10, வியாழக்கிழமை

பார ஊர்தியுடன் புகையிரதம் மோதி விபத்து ; ஒருவர் காயம்

Janu   / 2023 ஜூலை 23 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (23) பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பார ஊர்தியுடன் புகையிரதம் மோதுண்டதில் ஒருவர் காயமடைந்தார்.

ஏ9 வீதியில் இருந்து திருநாவற்குளம் பகுதிக்கு சென்ற பார ஊர்தியே பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் கடக்க முற்பட்ட போதே குறித்த விபத்து ஏற்பட்டது. இதன்போது பார ஊர்தி சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த பகுதியில் உள்ள புகையிரத கடவையில் பல தடவைகள் விபத்து ஏற்பட்ட போதிலும் காவலாளிகள் நியமிக்கப்படும் தொடர்பிலும் மக்கள் விசனம் தெரிவித்தனர்.

க. அகரன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .