2025 மே 14, புதன்கிழமை

பிரதமரின் கருத்துக்கு சிறிதரன் ஆவேசம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 10 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடி தொழிலில் மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்படுவர் என்ற பிரதமரின் கருத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன்  பதிலளித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

யுத்தத்துக்கு முன்னும் பின்னரும்  இந்தியாவின் ரோலர் படகுகள் பவளப்பாறை உட்பட மீன் உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக வடபகுதியில் உள்ள மீனவர்கள் பெரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர். 
 
கச்சத்தீவில் கூட சுதந்திரமாக சென்று மீன் பிடிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும், நெடுந்தீவு கடப்பரப்பில் கூட மீன் உற்பத்தியில் பெரும் வீழ்ச்சிகண்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், இதன் காரணமாக மீனவ குடும்பங்கள் தமது இலக்கை அடைய முடியாத நிலையில் காணப்படுகின்றதாகவும் தெரிவித்தார்.
 
இதற்கமைய, தொழில் புரியும் பகுதிகள் அட்டைப்பண்ணைக்கு வழங்கப்பட்டு மீன் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளதாகவும், இந்த நிலையில் தமிழக சகோதரர்களுக்கு அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறுவது தமிழக மீனவர்களையும் இலங்கையில் உள்ள வடபகுதி தமிழ் மீனவர்களையும் அடி பட வைத்து தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்குமான ஒரு விரிசலை உருவாக்கும் நோக்கிலும், இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியா தமிழர்களுக்கும் உள்ள தொப்புள் கொடி உறவை அறுத்தறியும் நோக்கில் நரி தந்திரபாயங்களில் ரணில் மேற்கொண்டு வருகின்றார் எனவும் தெரிவித்தார்.
 
யுத்த காலத்தில் கருணாவை பிரித்தது போல தற்பொழுது இருக்கின்ற தமிழ் கட்சிகளைப் பிரிக்கின்றது போன்று ஜனாதிபதி ரணில் செயற்பட்டு வருகின்றார். 
 
எங்களுக்கு ஆதரவு தரக்கூடியவர்கள் மற்றும் எங்களோடு சேர்ந்து வரக்கூடிய அனைவரையுமே பிரித்து அவர்களுக்கிடையே கசப்பான உணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கிலே செயல்பட்டு வருகின்றார் எனவும், இந்திய மீனவர்களுக்கு எடுத்துரைத்து எங்களுடைய கடற்பரப்பில் எங்களுடைய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு இடையூறளிக்க வேண்டாம் என அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
பு.கஜிந்தன்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X