Janu / 2024 ஓகஸ்ட் 20 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா பன்றிக்கெய்த குளம் பகுதியை சேர்ந்த 54 வயதுடைய ரத்தினம் மதிவதனன் என்பவர் புதையல் தோண்ட முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதன்போது அவரிடமிருந்து புதையலை கண்டறிவதற்காக பயன்படுத்தப்படும் ஸ்கேனர் கருவி உட்பட மணல் அகழ்வதற்கான உபகரணங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை வவுனியா ஓமந்தை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
க. அகரன்

7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago