2026 மார்ச் 13, வெள்ளிக்கிழமை

பெண் உட்பட சிறுவர்கள் மீது தாக்குதல்

Janu   / 2024 செப்டெம்பர் 05 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணவத்தை பகுதியில் வன்முறை கும்பல் ஒன்று வீடு புகுந்து  , பெண் உட்பட  சிறுவர்கள் ஐவர் மீது தாக்குதல் தாக்குதல் நடாத்தியுள்ள சம்பவம் புதன்கிழமை (04) இடம்பெற்றுள்ளது . 

 இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், ஊரவர்கள் இணைந்து, வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறு கூறி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

 வட்டுக்கோட்டை பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற வீட்டினை பார்வையிட்டதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்து அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் ஏனைய ஐவரையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .