2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பெண் மீது பொலிஸார் தாக்குதல்

Freelancer   / 2023 நவம்பர் 23 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு  - விசுவமடு  பாரதிபுரம் பகுதியில் பொலிஸாரால் பெண் ஒருவர் தாக்கப்பட்டு  கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 

முல்லைத்தீவு புதுக் குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் நேற்று (22) குறித்த பெண் அவரது மகன் பேரக் குழந்தை ஆகியோர் உள் வீதியில் இருந்து பிரதான வீதிக்கு பேருந்துக்காக சென்ற போது,  பாரதிபுரம்  கிராம அலுவலர் அலுவலகத்தில் இருந்து வந்த இரு  பொலிஸார் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை மறித்து 20 மீற்றர் தள்ளி மோட்டார் சைக்கிளை நிறுத்தியதாகவும் மறித்த இடத்தில் சைக்கிளை நிறுத்த முடியாதா? என கேட்டு மகனையும் பின்னால் இருந்த தாயான பெண்ணையும்  கடுமையாக தாக்கியுள்ளனர் 

இதில் படுகாயமடைந்த பெண் தரும்புரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சை க்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் 

இதே வேளை  சம்பவ இடத்திலிருந்து பொலிஸார் உடனடியாக வெளியேறி  காயமடைந்த பெண் மற்றும் அவரது மகன் பேரக்குழந்தை மோட்டார் சைக்கிள் என்பவற்றை அவ்வாறே விட்டு அங்கிருந்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்ப்பட்டுள்ளது.

யது பாஸ்கரன்

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .