2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

“பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்”

Janu   / 2023 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தனின் வருடாந்த உற்சவம் நேற்றைய தினம் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்களுக்கு திருவிழா நடைபெறவுள்ளது. 

அந்த காலத்தில் நல்லூர் ஆலய வளாகத்தில் பொலிஸார் மற்றும் யாழ்ப்பாண மாநகரசபையினரால் விசேட நடைமுறைகள் வீதி ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன எனவே அந்த செயற்பாட்டிற்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

குற்ற செயல்களை கட்டுப்படுத்துவதற்காக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், நல்லூர் ஆலய சூழலில் பொலிஸார் சிவில் உடையிலும், சீருடையிலும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்

எனினும் பொதுமக்கள் தங்களுடைய உடமைகளை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் , ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் வீடுகளை  நன்றாக பூட்டி தங்களுடைய வீடுகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி ஆலயத்திற்கு வந்து செல்ல வேண்டும் என அவர் தெரிவித்தார்.

எம்.றொசாந்த் 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X