2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

போராட்ட குழு தலைவர் வீட்டில் சோதனை

Mithuna   / 2024 ஜனவரி 09 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி பூநகரி பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து மக்கள் ஒன்றியத்தின் தலைவரின் வீட்டில் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் செவ்வாய்க்கிழமை (09)  சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ஜெயபுரம் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து மோப்ப நாய்களின் உதவியுடன் இச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். சோதனைக்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.  

அனைத்து மக்கள் ஒன்றியத் தலைவரான வல்லிபுரம் பாஸ்கரன் வீட்டிலேயே இச்சோதனை நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.

மேலும், பொன்னாவெளியில் சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிராக நடைபெறுகின்ற போராட்டத்தினை இலக்காக கொண்டு போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் இச்சோதனை நடவடிக்கை இடம் பெற்றிருக்கலாம் என வல்லிபுரம் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X