2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

மகன் விஷம் அருந்திய அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு

Freelancer   / 2023 நவம்பர் 09 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

மகன் ஒருவர் விஷம் அருந்தியால் அதிர்ச்சியடைந்த தந்தை உயிரிழந்துள்ளார். சோனெழு, கோப்பாய் மத்தி பகுதியைச் சேர்ந்த முத்துத்ததம்பி விவேகானந்தம் (வயது 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

உயிரிழந்த நபரின் இரண்டாவது மகன் சம்பவத்தினத்தன்று விஷம் அருந்தியதனால் அதிர்ச்சியில் தந்தையார் மயங்கியுள்ளார். இந்நிலையில் அவரை உடனடியாக கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விஷம் அருந்திய மகன் உயிர் தப்பிய நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X