2025 மே 14, புதன்கிழமை

மது போத்தல்களுடன் ஒருவர் கைது

Editorial   / 2023 ஓகஸ்ட் 31 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் சந்தேக நபர் ஒப்படைக்கப்பட்டார்.

போயா தினமான புதன்கிழமை (30) மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 25 கால் (1ஃ4) போத்தல் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதான சந்தேக நபரும் சாராய போத்தல்களும் மேலதிக நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்

நிதர்ஷன் வினோத்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .