2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

மின்னல் தாக்கத்தில் வீடு சேதம்

Mayu   / 2026 ஏப்ரல் 06 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் இன்று (06) திங்கட்கிழமை அதிகாலை நிலவிய கடும் இடி மின்னலுடன் கூடிய மழையின் போது, வடமராட்சி கெருடாவில் பகுதியில் மின்னல் தாக்கியதில் வீடொன்று சேதமடைந்துள்ளதுடன், அங்கிருந்தவர்கள் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளனர்.

அதிகாலை வேளையில் பெய்த கனமழையின் போது, கெருடாவில் பகுதியிலுள்ள வீடொன்றின் அருகில் இருந்த தென்னை மரம் ஒன்றின் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதில் தென்னை மரம் உடனடியாகத் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

மின்னல் தாக்கத்தின் அதிர்வினால் குறித்த வீட்டின் சுவர்களில் ஓட்டைகள் விழுந்ததுடன், ஜன்னல்கள் மற்றும் கதவு நிலைகளும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகின. எனினும், அந்த நேரத்தில் வீட்டில் இருந்த குடும்பத்தினர் எவ்விதக் காயங்களுமின்றி தெய்வாதீனமாகத் தப்பினர்.

தென்னை மரம் தீப்பற்றி எரிவதைக் கண்ட அயலவர்கள் உடனடியாக ஒன்றுதிரண்டு, துரிதமாகச் செயற்பட்டுத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த மின்னல் தாக்கத்தின் பாதிப்பு அயல் வீடுகளிலும் எதிரொலித்துள்ளது. அருகிலுள்ள வீடுகளில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளிட்ட பல இலத்திரனியல் சாதனங்கள் செயலிழந்து சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .