2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு

Editorial   / 2024 டிசெம்பர் 30 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஆர்.லெம்பேட்

மன்னார் சௌத் பார் கடற்பரப்பில் மிதந்து வந்த சடலத்தை திங்கட்கிழமை (30) காலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர். -மன்னார் சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த சதாசிவம் ராசு (வயது-59) என்ற குடும்பஸ்தர் என உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.  அவர் கடந்த 28 ஆம் திகதி முதல் காணாமல் போன நிலையில் குடும்ப உறவினர்கள் அவரை தேடி வந்தனர்.

மீனவர்கள் கடற்படையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலத்தை மீட்ட கடற்படையினர் சௌத் பார் கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.

   சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X