2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் தொழிற் சந்தை...

Janu   / 2025 மார்ச் 11 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனித வலு , வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (11)  காலை மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில்    தொழிற் சந்தை  நடாத்தப்பட்டது.

இதன் போது மன்னார் மாவட்டம் முழுவதும் இயங்கி வரும் தொழில் வழங்கும் நிறுவனங்களும் அதே நேரம் உயர்கல்வி வழங்கும் நிறுவனங்களும்,உள்ளூர் உற்பத்தியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர். 

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  உட்பட பிரதேச செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள், தொழில் வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள்,மற்றும் வேலை வாய்ப்புக்காக காத்திருந்த பல நூற்றுக்கணக்கான இளைஞர்,யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர். 

மாவட்ட தொழில் சந்தைக்கு வருகை தந்த தொழில் வழங்கும் நிறுவனத்தின் பிரதிநிதிகள், தமது நிறுவனங்கள் ஊடாக எவ்வாறு தொழிலை பெற்றுக்கொள்ள முடியும்?அதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர்.

அதே நேரம் உள்ளூர் உற்பத்தி முயற்சியாளர்களும் கலந்து கொண்டு தங்கள் உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தியதுடன் விற்பனை நடவடிக்கைகளிலும்   ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  எஸ்.ஆர்.லெம்பேட் 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X