Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Freelancer / 2022 ஒக்டோபர் 27 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் மாவட்டத்தில் 2022 -2023 ஆம் ஆண்டுக்கான பெரும்போக விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மன்னார் நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.யோகராசா தெரிவித்தார்
மன்னார் மாவட்டத்தில் நானாட்டான், மடு ,மன்னார், மாந்தை மேற்கு, முசலி ஆகிய பிரதேச செயலகப் பிரிகளில் பெரும்போக விவசாய செய்கைகளுக்கு உழவு நடிவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்காக கடந்த 21 ஆம் திகதி கட்டுக்கரை குளத்தில் இருந்து சிறு குளங்களுக்கு நீர் வைபவ ரீதியாக திறந்து விடப்பட்டுள்ளது.
கட்டுக்கரை குளத்தின் கீழ் 31 ஆயிரத்து 339 ஏக்கரும் மன்னார் மாவட்டம் முழுவதும் சுமார் 57 ஆயிரம் ஏக்கர் பெரும்போக நெற்செய்கை பண்ணப்பட உள்ளது.
பெரும்போக விவசாய நடவடிக்கைகளுக்கு 2023 மார்ச் முதலாம் திகதி வரை நீர் விநியோகம் நடைபெறும் என்று மன்னார் நீர்ப்பாசனப் பொறியியலாளர் எஸ். யோகராசா மேலும் தெரிவித்தார். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago