2025 மே 19, திங்கட்கிழமை

மன்னாரில் விசேட பரிசோதனை

Freelancer   / 2022 நவம்பர் 15 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மத்திய பேருந்து நிலையத்தில் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு நேற்று (14) காலை நீரிழிவு உள்ளிட்ட தொற்றா நோய்களை கண்டறிவதற்கான பரிசோதனை இடம் பெற்றது.

 மன்னார் நகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் பிராந்திய தொற்றா நோய்கள் தடுப்பு பிரிவினர்  இணைந்து குறித்த பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

 இதன் போது பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தமக்கு தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதனின் பணிப்புரைக்கு அமைவாக  வைத்தியர்கள் சுகாதார பிரிவினர் குறித்த பரிசோதனைகள் முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X