2025 மே 15, வியாழக்கிழமை

முதியவர்களுக்கான விசேட மருத்துவ முகாம்

Freelancer   / 2023 ஜூலை 17 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெரியமடு மேற்கு, பெரியமடு கிழக்கு, காய நகர், ஆகிய கிராம சேவையாளர் பகுதிகளில் மருத்துவ தேவைகளை நிறைவேற்ற முடியாத 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் நலன் கருதி விசேட மருத்துவ முகாம் திங்கட்கிழமை (17) இடம்பெற்றது.

மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் முதியவர்களுக்கான விசேட செயற்திட்டங்களை டெவ்லிங் நிறுவனம் நடாத்தி  வருகிறது. 

குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட முதியவர்களுக்கு மருத்துவ சிகிச்சை உட்பட சக்கர நாற்காலி, ஊன்றுகோல் வழங்கப்பட்டதுடன் கண்ணாடிகள், காது கேட்கும் கருவிகளும் வழங்கப்பட்டது.

 மேலும் மருத்துவ ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளும் மருத்துவ முகாமுடன் இணைந்து இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .