2025 மே 14, புதன்கிழமை

மோட்டார் குண்டு, துப்பாக்கி கைப்பற்று

Freelancer   / 2023 ஒக்டோபர் 09 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்மராட்சி - சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறுகுவெளி பகுதியில் மோட்டார் குண்டு மற்றும் ரி-56 துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் ஞாயிற்றுக் கிழமை (08) காலை தனது கால்நடைகளை கொண்டு சென்ற பெண் ஒருவரால் குறித்த ஆயுதங்கள் வயல் பகுதியில் பற்றையோரமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் ஆயுதங்களை பார்வையிட்டதுடன் அவ்விடத்தில் பாதுகாப்பு கடமையிலும் ஈடுபட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவினை பெற்று குறித்த ஆயுதங்களை செயலிழக்க வைக்கும் நடவடிக்கையினை சாவகச்சேரி பொலிசார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிதர்ஷன் வினோத்,  பு.கஜிந்தன் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X