Freelancer / 2023 ஒக்டோபர் 31 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பு.கஜிந்தன்
யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் நீர் இறைக்கும் மோட்டார்கள் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 5 தண்ணீர் இறைக்கும் மோட்டர்கள் மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

துன்னாலை குடவத்தைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் நெல்லியடிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த நபரை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
7 minute ago
10 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
4 hours ago