2024 மே 09, வியாழக்கிழமை

வடக்கிலும் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பம்

Niroshini   / 2021 ஒக்டோபர் 25 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எஸ்.றொசேரியன் லெம்பேட், சண்முகம் தவசீலன், என்.ராஜ், க. அகரன், மு.தமிழ்ச்செல்வன்
 

ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள், இன்று(25) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 1 முதல் 5 வரையிலான ஆரம்ப பிரிவு வகுப்புகள் ஆரம்பமாகின.

பெற்றோருடனேயே, அதிக எண்ணிக்கையான மாணவர்கள்  பாடசாலைக்கு சமூகமளித்தள்ளனர். அத்துடன், அதிக எண்ணிக்கையான மாணவர்கள் பாடசாலை சீருடையுடனும் சில மாணவர்கள் சாதாரண ஆடையுடனும் பாடசாலைக்கு சமூகமளித்திருந்தனர்.

இதேவேளை, பாடசாலை நுழைவாயிலில், சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக, மாணவர்களின் உடல் வெப்பம் அளவீடு செய்யப்பட்டதோடு, ஏனைய சுகாதார நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன.

மேலும் வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸார் பாடசாலைகளுக்கு முன்னால், விசேட கடமையை முன்னெடுத்தனர்.

பாடசாலைகளுக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் வருகை தந்திருந்தனர். ஆசிரியர்கள் மாணவர்களை சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றச்செய்து  பாடசாலை வளாகத்துக்குள் மாணவர்களை அழைத்திருந்தனர்.

பாடசாலை ஆரம்பிக்கப்பட்டமையானது, தமக்கு மிகவும் மகிழ்ச்சி எனத் தெரிவித்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள், தாம் கல்வி கற்க முடியாது இருந்ததாகவும் இதனால் தாம் பரீட்சையை எதிர்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் கூறினர்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில், பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவாக காணப்படுவதாக, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், பாடசாலைக்கு வந்த மாணவர்களோடு கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், வவுனியா மாவட்டத்தில், பாடசாலைகளுக்கு கணிசமான மாணவர்கள் வருகை தந்திருந்ததுடன்,அதிகளவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளில் இரு பிரிவுகளாக மாணவர்களை பாடசாலைக்கு வருமாறு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X