2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வர்த்தக நிலையத்தில் தீ; பொருட்கள் முற்றாக நாசம்

Janu   / 2024 ஜனவரி 10 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தண்ணீரூற்று-முள்ளியவளை பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் ஒன்றில் புதன்கிழமை (10) அதிகாலை தீ பரவியது.

திடீர் தீ பரவலை அவதானித்த அப்பிரதேச மக்கள், விரைந்து செயற்பட்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இருப்பினும் தீப்பரவல் காரணமாக வர்த்தக நிலையத்தில் இருந்த பல இலட்சம் பெறுமதியான பொருட்களும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளமை தெரியவந்துள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சண்முகம் தவசீலன், நடராசா  கிருஸ்ணகுமார்   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X