2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வவுனியா தவிசாளருக்கு எதிரான வழக்கு

R.Tharaniya   / 2025 ஜூலை 16 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா மாநகர சபை உப தவிசாளருக்கு எதிரான வழக்கு 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வவுனியா மாநகரசபைக்குட்பட்ட வைரவ புளியங்குளம் வட்டாரத்தில் ஜனநாயக தேசிய கூட்டணி சார்பிலு போட்டியிட்ட ப. கார்த்தீபன் 33 வாக்குகளை பெற்று தோல்வியடைந்திருந்தார்.

எனினும் அவரது கட்சிக்கு கிடைத்த போனஸ் ஆசனத்தினூடாக மாநகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதுடன் உதவி மேயராகவும் ஆளும் கட்சிகளால் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

எனினும் அவர் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைக்குட்பட்ட வட்டாரத்திலேயே வாக்குரிமையை கொண்டுள்ளதால் வவுனியா மாநகரசபையில் போட்டியிட்டமை மற்றும் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமைக்கு எதிராக வவுனியா மாநகரசபை உறுப்பினர்கள் இருவர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

க. அகரன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X