Freelancer / 2023 நவம்பர் 19 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பு.கஜிந்தன்
வவுனியா A9 - வீதி சந்தசோலை சந்தியில் நேற்று சனிக்கிழமை (18) இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் ஓமந்தையில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்த போது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வயோதிபர் ஒருவர் சந்தசோலை பகுதிக்கு திரும்பிய போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த இருவரும் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதுடன் முதியவர் வவுனியா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அக்கராயன் பிரதேசத்தில் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றிய 27 வயதான திரு.திஸாநாயக்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. M

37 minute ago
51 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
51 minute ago
2 hours ago
2 hours ago