2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வீடுகளுக்குள் புகுந்தவருக்கு வலை

Janu   / 2024 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழில் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த நபர் தொடர்பான சீ.சீ.ரீ.வி காணொளிகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

யாழ் மாவட்டத்தின் நல்லூர், மானிப்பாய், கோப்பாய், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அண்மைக் காலமாக தொடர் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக துவிச்சக்கர வண்டியில் வந்து இரவு மற்றும் பகல் நேரங்களில் முகமூடிகள், கையுறைகள் அணிந்து அடையாளம் காண முடியாதவாறு வீடுகளுக்குள் புகுந்து தொடர் திருட்டுக்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.

இது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் வீடொன்றுக்குள் புகுந்து திருடப்பட்ட சிசிரிவி காணொளிகளில் சந்தேக நபரின் முகமூடி கழன்றிருப்பதை அவதானிக்க கூடியாதாக இருந்துள்ளது .

இதனால் குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக தமக்கு அறிவிக்குமாறு கேட்டுள்ள பொலிஸார் இவ்வாறு தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X