2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

வீதித் தடைகளால் மக்கள் அசௌகரியம்

Freelancer   / 2022 பெப்ரவரி 09 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீதி தடைகளால் பொதுமக்கள் பாரிய இடர்பாடுகளைச் சந்தித்து வருகின்றனர்.

இது விடயமாக பலதடவைகள் சுட்டிக் காட்டியும் இன்று வரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வீதிகளில் 5 கிலோமீற்றருக்கு ஒரு வீதித் தடையினை படையினர் ஏற்படுத்தியுள்ளார்கள். அதிகளவான வீதித் தடைகள் காணப்படும் மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் வீதியில் கருவேலன்கண்டல்  என்ற பகுதியில் இராணுவத்தினரால் போடப்பட்டுள்ள வீதித் தடையில் மோதி உந்துருளியில் பயணித்த நபர் ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இந்த சம்பவத்தில் குறித்த நபர் பலத்த  காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இது தொடர்பிலான விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு பரந்தன் வீதி- திம்பிலி பகுதி, றெட்பான சந்திப்பகுதி உள்ளிட்ட சில இடங்களில் இராணுவத்தினரின் வீதித் தடைகளுக்குள் பஸ் தரிப்பிடங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X