2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

வேட்டைக்கு சென்றவர் துப்பாக்கி வெடித்து மரணம்

Janu   / 2024 பெப்ரவரி 14 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு – குமுழமுனை, தண்ணிமுறிப்பு காட்டுப்பகுதியில் வேட்டைக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சட்டவிரோத துப்பாக்கி வெடித்து வியாழக்கிழமை (14)  அதிகாலை  உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் ஆறுமுகத்தான் குளத்தினை சேர்ந்த 48 வயதுடைய  துரைராசா ஆனந்தராசா என்பவரே இவ்வாறு மரணமடைந்ள்ளார் .

சம்பவத்ன்று குறித்த நபர்  துப்பாக்கி வெடித்து படுகாயமடைந்த நிலையில், அவருடன் வேட்டைக்கு சென்றவர்களால் அவரை கொண்டுவரும்போது உயிரிழந்துள்ளார்.

மேலும் இவர் பயன்படுத்திய சட்டவிரோத துப்பாக்கி மற்றும் உயிரிழந்தவரின் சடலம் தண்ணிமுறிப்பு, குளக்கரை பகுதியில் வைக்கப்பட்டுள்ளதுடன்,  சம்பவ தொடர்பிலான விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செ.கீதாஞ்சன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X