2025 மே 14, புதன்கிழமை

ஹர்த்தால் குறித்து நாளை முடிவு

Janu   / 2023 ஒக்டோபர் 08 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹர்த்தால் திகதி தொடர்பாக இறுதி முடிவு செய்வதற்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணம்  தந்தை செல்வா அரங்கில்  திங்கட்கிழமை (09) மாலை 3 மணிக்கு தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களுடன் நடைபெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் சமூக ஆர்வலர்கள், தமிழ் உணர்வார்கள்,பொது அமைப்புகள் என்பன கலந்து கொண்டு ஹர்த்தால் திகதி தொடர்பில் கருத்துக்களை முன்வைக்கமுடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் மனஅழுத்தம்,  காரணமாக நாட்டை விட்டு வெளியேறியதாக குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறையில் இருந்தாலும் தமிழர் என்பதால் இன ஒடுக்குமுறைக்குள்ளாகுவதை சுட்டிக்காட்டியும்- கண்டித்தும் தமிழ் தேசிய கட்சிகள் கதவடைப்பு போராட்டத்தை நடத்தவுள்ளன.

இந்நிலையில் நீதிபதி விவகாரம் தொடர்பில் சர்வதேச நாடுகளுக்கு கையளிப்பதற்கான மகஜரில் எவ்வாறான விடயங்களை உள்ளடக்க வேண்டும் என்பதிலும் நாளை இறுதி முடிவு எடுக்கப்படும்.
ஆகவே இதனை தனிப்பட்ட அழைப்பாக ஏற்று சமூக ஆர்வலர்கள், தமிழ் உணர்வார்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டும்  என்றார். 

இதேவேளை ஹர்த்தாலை அடுத்தவாரம் நடாத்தவுள்ளதாக அறீவித்திருந்த நிலையில் அந்த வாரத்திலேயே புலமைப் பரிசில்  பரீட்சை நடைபெறவுள்ளதால் ஹர்த்தாலை நடாத்துவதற்கான திகதி தொடர்பில் குழப்பம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

நிதர்ஷன் வினோத்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X