2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஹெரோயின் போதை ஊசியை ஏற்றிய நபர் உயிரிழப்பு

R. Yasiharan   / 2022 டிசெம்பர் 29 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செந்தூரன் பிரதீபன்

அதிகளவான ஹெரோயின் போதை ஊசியினை எடுத்துக் கொண்ட இளைஞன் உயிரிழந்த சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது.

தலங்காவில் பிள்ளையார் கோவில் திருநெல்வேலி பகுதியை சேர்ந்த 25 வயதான கிறிஸ்டி சதீஷ்குமார் டனிஷ்ரன் என்ற இளைஞனே உயிர் இழந்துள்ளார்.

இவர் நேற்று மாலை நான்கு நண்பர்களுடன் ஒன்றாக சேர்ந்து ஹெரோயின் ஏற்றியுள்ளார். நான்காவதாக இவர் ஊசியினை பரிமாற்றி ஏற்றுக் கொண்ட பொழுது, நரம்பு ஊடாக காற்றின் அழுத்தம் அதிகரித்துள்ளது. அத்துடன் அவர் சுவாச பிரச்சனைக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

உயிரிழந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை இடம்பெற்றது.

அதிகளவாக ஹெரோயின் போதை ஊசியை ஏற்றிக் கொண்டதால் இவர் உயரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X