Suganthini Ratnam / 2016 ஜூலை 15 , மு.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.அறூஸ்
அம்பாறை, அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் பின்தங்கிய இடங்களிலுள்ள மக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான ஏற்பாட்டை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல்; அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் பணித்துள்ளார்.
இதற்கமைய குடிநீர் இணைப்பை வழங்குவதற்கான நடவடிக்கை தொடர்பில் ஆராயும் கூட்டம் நேற்று வியாழக்கிழைமை மாலை அக்கரைப்பற்றில் அமைந்துள்ள தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் இணைப்பாளர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இன்னும் ஒரு மாத காலத்துக்குள் பின்தங்கிய இடங்களிலுள்ள மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதுடன், இங்கு பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட சகல கோரிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என தேசிய நீரவழங்கல் வடிகாலமைப்பு சபையின் கிழக்கு மாகாண உதவிப் பொதுமுகாமையாளர் எம்.எம்.எம்.நஸீல் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago