2021 மே 06, வியாழக்கிழமை

அட்டாளைச்சேனை சிறுவர் பூங்காவை புனரமைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 20 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அட்டாளைச்சேனையில் சிறுவர் கடற்கரைப் பூங்காவின் சில பகுதிகள் இனந்தெரியாத சிலரினால் உடைக்கப்பட்டுள்ளதை இன்று வெள்ளிக்கிழமை காலை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தலைமையிலான குழுவினர் சென்று பார்வையிட்டனர்.

ஏ.எல்.முஹம்மட் நஸீர் கிழக்கு மாகாணசபை உறுப்பினராக இருந்தபோது, அவரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த சிறுவர் கடற்கரைப் பூங்கா நிர்மாணிக்கப்பட்டது. இப்பூங்கா பின்னர் இனந்தெரியாதோரினால் உடைக்கப்பட்டது.

இப்பூங்காவை உடனடியாக திருத்தம் செய்வதற்குரிய  சகல முன்னெடுப்புகளையும் ஆரம்பிக்குமாறு  அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் க.பிலேந்திரன் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான எஸ்.எல்.முஹம்மட் தம்பி உள்ளிட்டோரு;ககு சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் பணித்தார்.

இதனை திருத்தம் செய்வதற்கு 35 இலட்சம் ரூபாவை உடனடியாக ஒதுக்கீடு செய்து தருவதாகவும் இப்பூங்காவின் சகல திருத்த வேலைகள் இம்மாத இறுதிக்குள் பூர்த்தியாக்கப்பட்டு  பொதுமக்களின் பாவனைக்கு விடப்படவேண்டுமெனவும் அவர்  உத்தரவிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .