2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

அதிபர்களுக்கு விழிப்புணர்வுச் செயலமர்வு

Suganthini Ratnam   / 2016 ஜூலை 24 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட பாடசாலைகளின் சிற்றுண்டிச்சாலைகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அதிபர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு, நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 09 மணி முதல் நண்பகல் 12 மணிவரை அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது.

கல்முனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை மற்றும் திருக்கோவில் வலயக் கல்வி அலுவலங்களுக்குட்பட்ட பாடசாலைகளின் சிற்றுண்டிச்சாலைகளில் கடந்த மே மாதம் முதல் ஜுன் மாதம் வரையான காலப்பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது சிற்றுண்டிச்சாலைகளில் சுகாதாரம் பேணப்படாமை, மாணவர்களுக்கு போஷாக்குடைய உணவு வழங்கப்படாமை கண்டறியப்பட்டது. அநேகமான சிற்றுண்டிச்சாலைகளில் குளிர்பானங்களும் இனிப்புப்பண்டங்களும் விற்பனை செய்யப்படுகின்றமை கண்டறியப்பட்டதாக கல்முனை மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் பீ.பேரம்பலம், இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இந்நிலையில், பாடசாலைகளின் அதிபர்களுக்கு விழிப்புணர்வுச் செயலமர்வை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும்; அவர் கூறினார்.
 
மேலும், சம்மாந்துறை வலயப் பாடசாலைகளின்  அதிபர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு, எதிர்வரும் வியாழக்கிழமை காலை 09 மணி முதல் நண்பகல் 12 மணிவரை சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X