2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

’இணைத் தலைவர்களில் ஆலோசனைகளுடன் திகதியைத் தீர்மானிக்கவும்’

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2017 ஜூலை 17 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை நடத்துவதற்கான திகதியை, அப்பிரதேசத்துக்குப் பொறுப்பான இணைத் தலைவர்களின் ஆலோசனைகளைப் பெற்றே தீர்மானிக்கும்படி, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் டீ அல்விஸினால், பிரதேச செயலாளர்களுக்கு, இன்று (17)அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் ஆகியோர், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அட்டாளைச்சேனை, நிந்தவூர், அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேசங்களின் இணைத் தலைவர்களில் ஒருவராகச் செயற்பட்டு வரும் சுகாதாரப் பிரதியமைச்சர் பைசால் காசிமினால், குறித்தொதுக்கப்பட்ட கூட்டத் திகதியிலேயே, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட அமர்வுகள் இடம்பெறவுள்ளமை குறித்து, இணைத் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பையினால், ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெனாண்டோவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

மேற்படி விடயம் தொடர்பாக, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கும் அதன் பிரதியொன்று அனுப்பி வைக்கப்பட்டதற்கமைய, மாவட்ட அரசாங்க அதிபரினால், உரிய பிரதேச செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கி, கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேற்குறித்த பிரதேச செயலகப் பிரிவுகளில் இன்றும் (17) நாளையும் (18) நடைபெறவிருந்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், இவற்றைப் பிறிதொரு தினங்களில் நடத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .