2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

இராமகிருஷ்ணா மாணவர்கள் பேரணி

Editorial   / 2017 ஜூன் 03 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

மூதூரில், மாணவிகள் மூவர் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதை கண்டித்து, நேற்று அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை மாணவர்கள் ஒன்றிணைந்து கண்டனப்பேரணியில் ஈடுபட்டனர்.

பாடசாலை முன்பாக ஆரம்பித்த இந்த கண்டனப் பேரணி பிரதேச செயலக வீதியூடாக சென்று, சாகாம வீதியை அடைந்து மீண்டும் பாடசாலையை சென்றடைந்தது.

2015இல் வித்யா, 2016இல் சேயா, இன்று இம்மாணவர்கள், நாளை யார்? என அம்மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.

இக்கொடூர சம்பவத்துடன், தொடர்புபட்டவர்கள் உடன் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்க பொறுப்பானவர்கள் நடவடிக்கை எடுப்பதுடன், இனிவரும் காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .