2021 ஜனவரி 27, புதன்கிழமை

உணவு விடுதியின் மேற்பரப்பு உடைந்து விழுந்தது

George   / 2016 ஜூலை 09 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுகிர்தகுமார், பைஷல் இஸ்மாயில், எம்.எஸ்.எம்.ஹனீபா

அக்கரைப்பற்று கடற்கரை வீதியில் அமைந்துள்ள உணவு விடுதி ஒன்றில்; அமைக்கப்பட்டிருந்த மரத்தாலான மேற்பரப்பு, நேற்று(08) இரவு உடைந்து விழுந்ததில் உணவருந்திக் கொண்டிருந்த சிலர் காயங்களுக்குள்ளான நிலையில் அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பழைய மாணவர்கள் குழுவொன்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இரவு விருந்தின்போதே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

25 மேற்பட்டவர்கள்  உணவு விடுதியின் மரத்தாலான மேல் பகுதியில் இருந்து  உணவருந்தி முடிவடையும் தறுவாயில் குறித்த மரக்கூடார மேற்பகுதி திடீரென உடைந்து நொறுங்கி கீழே விழுந்துள்ளது.

அதகையடுத்து, காயமடைந்த 10பேர் உடனடியாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .