2026 ஜனவரி 25, ஞாயிற்றுக்கிழமை

கல்முனையில், மலையக சிறுமி வன்புணர்வு

Janu   / 2026 ஜனவரி 25 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீட்டுப் பணிப் பெண்ணாக வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சந்தேகத்தின் பேரில் 37 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கடந்த 2026.01.18 அன்று கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர், பெண்கள் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

மலையக பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுமியொருவர் வீடொன்றில் பணிப்பெண்ணாக செயற்பட்டு வந்துள்ளதுடன் கடந்த 15 ஆம் திகதியன்று இரவு சந்தேக நபர் தன்னை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை  செய்ததாக சிறுமி வாக்குமூலம் வழங்கியுள்ளார். 

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தற்போது கைது செய்யப்பட்டு, கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். 

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பான  மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாறுக் ஷிஹான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X