2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

கஞ்சா கடத்தியவர் தப்பியோட்டம்: கஞ்சா மீட்பு

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

கல்முனை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படும் ஒருவரை  பொலிஸார் துரத்தியபோது,  அச்சந்தேக நபர் மோட்டார் சைக்கிளையும் கஞ்சாவையும் விட்டுவிட்டு தப்பியோடிய சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(18) இரவு இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில்; மோட்டார் சைக்கிளையும் ஒரு கிலோ 600 கிராம் கஞ்சாவையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
போலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, கல்முனை மாளிகைக்காடு பிரதேசத்தில் சிவில் உடையில் பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது மாளிகைக் காட்டு பிரதேசத்தில் இருந்து திருக்கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை எடுத்துச் சென்றவரை பொலிஸார் பின் தொடர்ந்து துரத்தியபோது குறித்தநபர் மோட்டார் சைக்கிளில் தப்பிஓடி காரைதீவு பிரதேசத்தில் வங்கிக்கு அருகில் மோட்டார் சைக்கிளையும் கஞ்சாவையும் விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இது தொடர்பாக கல்முனை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .