2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

கஞ்சிகுடிச்சாற்றில் 'புதிதாக இராணுவ முகாம் அமைப்பதற்கான முயற்சியை ஏற்க முடியாது'

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 15 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை, கஞ்சிகுடிச்சாற்றில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான இடத்தில் புதிதாக இராணுவ முகாம் அமைக்க எடுக்கும் முயற்சியை எந்தவிதத்திலும் ஏற்கமுடியாது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.

இது தொடர்பாக நேரடியாகச் சென்று பார்வையிட்ட பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, இப்பிரதேசத்திலுள்ள மக்கள் என்னிடம் தொடர்பு கொண்டு, தமது பிரதேசத்தில் புதிதாக இராணுவ முகாம் அமைப்பதற்கான முன்னேற்பாடுகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாகக் கூறியமைக்கு அமைய அவ்விடத்துக்கு புதன்கிழமை (14) நான்; சென்றேன்.  

அங்கு சென்று பார்த்தபோது, எமது மக்களுக்குச் சொந்தமான இடங்களிலும் இறந்தவர்களின் சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கும் இடத்திலும் புதிதாக இராணுவ முகாம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதை அவதானிக்க முடிந்தது.

தற்போதைய சூழலில் புதிய இராணுவ முகாம் அமைப்பது பொருத்தம் இல்லாத  செயற்பாடாகும் என்பதை உரியவர்கள் கவனத்திற்கொண்டு செயற்பட வேண்டும். இது இப்பிரதேச மக்கள் மத்தியில்  அச்ச நிலைமையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நாட்டில் தற்போதுள்ள அரசாங்கத்தை ஏற்படுத்தியவர்கள் என்ற ரீதியில் எமது மக்களின் கருத்துகளுக்குச் செவிசாய்க்க வேண்டிய பாரிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. இந்நிலையில்,  இனிமேலும் புதிய இராணுவ முகாம் அமைப்பதைத்  தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்' என்றார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--