2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

கூடிய விலைக்கு அரிசி விற்பனை; 30 வர்த்தகர்கள் மீது வழக்கு

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2020 ஜனவரி 05 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை மாவட்டத்தில் அதி கூடிய விலைக்கு அரிசி விற்பனை செய்த 30 வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக, பாவனையாளர் அலுவலகள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி என்.எம். சப்றாஸ் தெரிவித்தார்.

அரிசி கட்டுப்பாட்டு விலை தொடர்பாக, கடந்தாண்டு டிசெம்பர் 19ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானிக்கு அமைவாக, நாட்டரிசி ஒரு கிலோகிராம் 98 ரூபாயும், சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 98 ரூபாயாகவும் உயர்ந்த பட்ச கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்டங்களை மீறி, உயர்ந்த பட்ச கட்டுப்பாட்டு விலை மீறி அரிசி விற்பனை செய்யப்படுவதாக, நுகர்வோர் செய்த முறைப்பாட்டையடுத்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் வர்த்த நிலையங்களில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, இந்த வர்த்தகர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனரென, தெரிவித்தார்.

இவர்களுக்கு எதிராக அக்கரைப்பற்று, பொத்துவில், கல்முனை, சம்மாந்துறை, அம்பாறை, தெஹியத்தக் கண்டி ஆகிய நீதவான் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த 2019ம் ஆண்டு காலப்பகுதியில் அத்தியவசியப் பொருள்களைப் பதுக்கி வைத்தல், நுகர்வோர் நலன் கருதி வர்த்தக நிலையங்களில் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாமை, கட்டுப்பாட்டு விலையை விட கூடுதல் விலைக்கு பொருள்களை விற்பனை செய்தல் போன்ற நுகர்வோர் பாதுகாப்பு சட்ட திட்டங்களை மீறி விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் 1,075 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட 44 இலட்சத்தி 23 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--