2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

கட்டணம் செலுத்தாதோரின் நீர் இணைப்புகள் துண்டிக்கப்படும்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 10 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அக்கரைப்பற்று காரியாலயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 03 மாதங்களுக்கு மேலாக நீர்ப் பாவனைக் கட்டணம் செலுத்தாத 1,300 வாடிக்கையாளர்கள் உள்ளதுடன், இவர்களின் நீர் இணைப்புகளை நாளை திங்கட்கிழமை (11) முதல் துண்டிக்கவுள்ளதாக அக்காரியாலயப் பொறுப்பதிகாரி எம்.எல்.றமீஸ், இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.  

அக்கரைப்பற்று, ஆலங்குளம், ஆலிம் நகர், கோளாவில், இலுக்குச்சேனை, ஆலையடிவேம்பு, சின்னமுகத்துவாரம் ஆகிய பகுதிகளிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

நீர்த் துண்டிப்பின் பின்னர் மீள் இணைப்பை பெற்றுக்கொள்வதற்காக கடந்த காலத்தில்  2,200 ரூபாய் அறவீடு செய்யப்பட்டது. தற்போது இத்தொகை 1,150 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் நீர்த் துண்டிப்பின் பின்னர் நீர்க் கட்டணப் பட்டியல் தொகையுடன் தண்டப்பணத்தையும் முழுமையாகச் செலுத்துவோருக்கே மீள் இணைப்பு வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

ஆகவே, நீர் பாவனைக்குரிய நிலுவையை செலுத்தாத வாடிக்கையாளர்கள் கட்டணத்தைச் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .